ஆப்நகரம்

மின்சார ரயிலில் செல்பவர்கள் கவனத்திற்கு.. பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு.!

செப்டம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள் சேவை 6 மணிநேரம் தாமதமாகும் என தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 13 Sep 2019, 6:55 pm
சென்னை வேளச்சேரியிலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரையில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
Samayam Tamil fsfsf


சென்னையின் மின்சார ரயில் சேவையானது போக்குவரத்தில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த வழித்தடத்தில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் அந்தந்த நடைமேடைக்கு வந்துச் செல்கிறது. சென்னை கடற்கரை முதல் லைட் ஹவுஸ், வேளச்சேரி வரை இந்த வழித்தடங்களில் மின்சார ரயில் சேவை இயங்கி வருகிறது.

இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று 18 ரயில்களின் சேவை 6 மணி நேரம் ரத்து செய்யப்பட்டுப் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மதியம் 2.10 மணி முதல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இந்த சேவையானது, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி செல்லும் ரயில்கள் வேளச்சேரியிலிருந்து கடற்கரை ரயில் நிலையம் செல்லும் ரயில்கள் என இரண்டு வழித்தடத்திலும் ரத்து செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி