ஆப்நகரம்

வேளாங்கண்ணித் திருவிழாவை முன்னிட்டு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம்!

தாம்பரம் - வேளாங்கண்ணி இடையிலான சுவிதா சிறப்பு ரயில் இன்று மாலை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Samayam Tamil 5 Sep 2018, 1:20 pm
தாம்பரம் - வேளாங்கண்ணி இடையிலான சுவிதா சிறப்பு ரயில் இன்று மாலை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Samayam Tamil train_144287205730_650x425_092215032037
வேளாங்கண்ணித் திருவிழாவை முன்னிட்டு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம்!


நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், திருத்தலப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி 7-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மறுநாளான 8-ஆம் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - வேளாங்கண்ணி இடையிலான சுவிதா சிறப்பு ரயில் இன்று மாலை இயக்கப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மாலை 5 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை, 10.10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி