ஆப்நகரம்

நீட் போராட்டம் எதிரொலி: மாணவர் சேர்க்கையை நிறுத்தியது சி.எம்.சி கல்லூரி

அனிதாவின் மரணம் எதிரொலியாக மருத்துவ மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரி நிறுத்தி வைத்துள்ளது.

TNN 6 Sep 2017, 12:59 pm
அனிதாவின் மரணம் எதிரொலியாக மருத்துவ மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரி நிறுத்தி வைத்துள்ளது.
Samayam Tamil vellore cmc medical college stopped the admisssion process
நீட் போராட்டம் எதிரொலி: மாணவர் சேர்க்கையை நிறுத்தியது சி.எம்.சி கல்லூரி

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், அதற்குக் காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரயில் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மறைந்த ராணுவ வீரர் ஒருவரின் மகன் சேர்க்கப்பட்டுள்ளார். மீதமுள்ள இடங்கள் நிரப்பப்படவில்லை.

வேலூர் மருத்துவ கல்லூரியில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இதில் 85 இடங்கள் சிறுபாண்மையினருக்கானது என்றும் எஞ்சிய 15 இடஙண்கள் பொதுப்பிரிவினருக்கானது என்றும் கூறப்படுகிறது,.

சிறுபாண்மையினர் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்கள், தங்களது படிப்பு முடிந்த பின்னர் சி.எம்.சி மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். இதனால் 90% மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது நீட் தேர்வின் அடிப்படையில் இத்தகைய மாணவர்களை தேர்வு செய்ய முடியாது என்றும் நீட் தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை என்பது கல்லூரி நிர்வாக முறைக்கு எதிரானது என்றும் கூறிய சிஎம்சி நிர்வாகம், இதனால் இந்த ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி