ஆப்நகரம்

சோளிங்கரில் தண்டவாளம் விரிசல்: பெரும் விபத்தை தடுத்த ஊழியர்கள்!

வேலூா் மாவட்டம் சோளிங்கர் ரயில் நிலையத்திலிருந்து மகேந்திரவாடி ரயில் நிலையத்துக்கு இடையேயுள்ள ரயில் தண்டவாளத்தில் ஏற்ப்பட்டுள்ள விரிசலால் சென்னைக்கு செல்லவிருந்த ஜோலார்பேட்டை ரயில்கள் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றன.

Samayam Tamil 3 Oct 2019, 3:31 pm
வேலூா் மாவட்டம் சோளிங்கர் ரயில் நிலையத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஜெயவேல் வழக்கம்போல் தன் பணிக்கு சென்றார். அப்போது சோளிங்கர் ரயில் நிலையத்திலிருந்து மகேந்திரவாடி ரயில் நிலையத்துக்கு இடையேயுள்ள தண்டவாளம் விரிசல் இருப்பதைக்கண்டு சோளிங்கர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
Samayam Tamil vellor

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள் அவ்வழியாக ஜோலார்பேட்டையிலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை பாதி வழியிலே நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்பு ரயில்வே ஊழியர்கள் விரைந்து விரிசலை சரி செய்தனர்.
இதனால் சென்னை மார்கத்தில் சோளிங்கர் ரயில் நிலையம் அருகே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அந்தப் பகுதியை கடக்கும் ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றன. இதனால் பணிக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். இதை தொடர்ந்து இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

அடுத்த செய்தி