ஆப்நகரம்

கணியம்பாடி அமைதிபூங்கா கிராமத்தில் மக்கள் பல்கலைக்கழகம் சார்பில் ஐந்து நாட்கள் அறிவு சார்கருத்தரங்கு

கணியம்பாடி அமைதிபூங்கா கிராமத்தில் மக்கள் பல்கலைக்கழகம் சார்பில் ஐந்து நாட்கள் அறிவு சார்கருத்தரங்கு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். வெளிநாட்டை சேர்ந்த நிபுணர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்

Samayam Tamil 27 Jan 2019, 11:54 pm
கணியம்பாடி அமைதிபூங்கா கிராமத்தில் மக்கள் பல்கலைக்கழகம் சார்பில் ஐந்து நாட்கள் அறிவு சார்கருத்தரங்கு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். வெளிநாட்டை சேர்ந்த நிபுணர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்
Samayam Tamil vellore conference


வேலூர்மாவட்டம்,கணியம்பாடி அருகே அமைதிபூங்கா கிராமத்தில் மக்கள் பல்கலைக்கழகத்தின் சார்பில் 4 ஆவது சர்வதேச அளவிலான அறிவுசார் கருத்தரங்கு 26- ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது இதில் இரண்டாம் நாளான இன்று உட்கொள்ளும் உணவுகளே மருந்துகளாகவும் உடலை கட்டுபாட்டுடன் வைத்திருப்பது எப்படி என்பது குறித்து பாரம்பரிய சித்தர் வைத்தியர் டாக்டர் அர்சுணன் கலந்துகொண்டு பேசினார்

இதே போன்று தைவான் நாட்டை சேர்ந்த இசைக்கலைஞர் ஜிங்கிஸ் லீ என்பவர் இசையின் தன்மை இசை மூலம் என்ன சாதிக்கலாம் வாதிய கருவி போன்றவைகள் குறித்து பேசினார்கள் இதே போன்று நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பிலிப் சிலேமன் என்பவர் கலந்துகொண்டு அறிவியல் வளர்ச்சிகுறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கி பேசினார் இதே போல் தாய்வான் நாட்டு பேராசிரியர் பேண்ட் ஜீங்க் என்பவர் மாணவர்களுக்கு எவ்வாறு கல்வியை கொண்டு சேர்ப்பது பொதுமக்களுக்கு எவ்வாறு கல்வியறிவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள் இதில் இந்தியா உட்பட வெளிநாடுகள் பல்வேறு அறிஞர்கள் கலந்துகொண்டனர் இக்கருத்தரங்கம் வரும் 30 ஆம் தேதி வரையில் நடக்கிறது இயற்கை சூழலோடும் கிராமத்திலும் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி