ஆப்நகரம்

கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல்: லேட்டஸ்ட் அப்டேட்!

நாகப்பட்டினத்தில் 59 மி.மீ, காரைக்காலில் 81 மி.மீ, கடலூரில் 139 மி.மீ, புதுச்சேரியில் 128 மி.மீ, சென்னையில் 89 மி.மீ மழை பொழிந்துள்ளது.

Samayam Tamil 26 Nov 2020, 10:17 am

அதி தீவிர புயலான நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது. கடலூரில் இருந்து வடகிழக்கு திசையில் 50 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 40 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 120 கிலோமீட்டர் தொலைவிலும் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது.
Samayam Tamil Pic Tweeted by @indiametdept


இந்த புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் வட மேற்கு திசையில் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. நாகப்பட்டினத்தில் 59 மி.மீ, காரைக்காலில் 81 மி.மீ, கடலூரில் 139 மி.மீ, புதுச்சேரியில் 128 மி.மீ, சென்னையில் 89 மி.மீ மழை பொழிந்துள்ளது.

நிவர் புயல் இரவு 10.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கிவிட்டது. புயலின் மையப்பகுதி அடுத்த மூன்று மணி நேரத்தில் புதுச்சேரி அருகே கரையை கடக்கும். காற்று மணிக்கு 120-130 கிலோமீட்டர் வேகத்திலும், சமயங்களில் 145 கிலோமீட்டர் வேகத்திலும் வீசத் தொடங்கியுள்ளது.

நிவர் புயல் கரையை கடந்தபின் என்ன நடக்கும்?

நிவர் புயல் முன்பகுதி கரையை கடக்க இன்னும் ஒன்றரை மணி நேரமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு கருதி புதுச்சேரி, காஞ்சிபுரம், கடலூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி