ஆப்நகரம்

மைசூருக்கு கொண்டு செல்லப்பட்ட T23 புலியின் வீடியோ வெளியீடு..!

மைசூர் உயிரியல் பூங்கா மறுவாழ்வு மையத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் T23 புலி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Oct 2021, 6:45 pm
நீலகிரியில் 4 பேரை மற்றும் கால்நடைகளை வேட்டையாடிய T23 புலியை தேடி பிடிக்க தமிழக வனத்துறை கடந்த 21 நாட்களாக காட்டிற்குள் முகாமிட்டு வந்தனர்.
Samayam Tamil t23 tiger


புலியை பிடிக்க 2 ட்ரோன் கேமராக்கள், 10 தெர்மல் கேமராக்கள், நெட் கன், பெப்பர் கன், கும்கி யானைகள் மற்றும் மயக்க ஊசி செலுத்தும் நிபுணர்கள் உள்ளிட்ட தொழில்நுட வசதிகள் இருந்தும் பல நாட்களாக போக்கு காட்டி வந்த புலி நேற்று இரவு 2 மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும் தப்பித்து சென்றது.

இந்நிலையில் நேற்று மசினகுடிக்கும் மாயாறுக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட புலியை கூண்டில் அடைத்து முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு வனத்துறையினர் கொண்டு சென்று பின்னர் மைசூர் உயிரியல் பூங்கா மறுவாழ்வு மையத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் அடைக்கப்பட்டுள்ளது. அங்கு அடைக்கப்பட்டுள்ள T23 புலியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


'அம்மா'உணவகத்தை மூட திட்டம்? - ஊழியர்கள் திடீர் போராட்டம்!

முன்னதாக ஆட்கொல்லி என அறியப்பட்ட அந்த புலியை சுட்டு பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உயிருடன் பிடிப்பதற்கான உத்தரவை வாங்கினர். அதன்படி, தமிழக வனத்துறை வரலாற்றில் உயிருடன் பிடிக்கப்பட்ட முதல் புலியாக T23 புலி தடம் பதித்துள்ளது.

அடுத்த செய்தி