ஆப்நகரம்

பிகில் கதை யாருடையது: வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!

பிகில் படத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

Samayam Tamil 17 Oct 2019, 3:55 pm
அட்லி இயக்கத்தில், விஜய், நயன்தாரா, ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணியில், பெண்கள் கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து
Samayam Tamil Untitled collage (6)

உருவாகியுள்ள படம் பிகில். இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாண்டத்தை மையமாகக் கொண்டு 256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து பதிவு செய்துள்ளத்தோடு, சில படத் தயாரிப்பு நிறுவனங்களிடமும் இதே கதையை சொல்லி இருந்ததாகவும் உதவி இயக்குநர் செல்வா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுபஸ்ரீ: ஜெயகோபால் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

மனுவில், அட்லி இயக்கும் பிகில் படத்தின் கதை தன்னுடைய கதையை ஒத்திருப்பதை அறிந்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகவும், அந்தப் புகாரின் மீது ஆலோசனை நடத்திய சங்கம், உறுப்பினராகி 6 மாதங்கள் ஆனால் மட்டுமே கதை திருட்டு தொடர்பான புகாரை எடுத்துக் கொள்ளமுடியும் எனக் கூறி தன்னுடைய புகாரை நிராகரித்ததால், பிகில் படத்தை திரையிடத் தடை விதிக்க விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.


'அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி' - ட்விட்டரில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, அட்லி மற்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “2018ம் ஆண்டு ஜூலை 12 ம் தேதி பிகில் படத்தின் கதை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், மனுதாரர் தன் கதையை அக்டோபரில் தான் பதிவு செய்துள்ளார்” என வாதிடப்பட்டது..

மேலும், “இந்த வழக்கு தொடர எந்த காரணமும் இல்லை. கீழமை நீதிமன்றத்தில் மனு வாபஸ் பெற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் மனு திரும்பப்பெறப்பட்டது. காப்புரிமை மீறியதாக கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறவில்லை. அதன்பின் காப்புரிமை சம்பந்தப்பட்டது என திரும்பப் பெற்றார். பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றனர்.

பிகில் ரன்னிங் டைம் எத்தனை மணிநேரம் தெரியுமா?

கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி பட நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்கும் முன், வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தை அணுகவும் எப்படி அனுமதி அளித்தார் என தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

அடுத்த செய்தி