ஆப்நகரம்

மாயமான விமானம்: விஜயகாந்த் பிரார்த்தனை

மாயமான விமானப்படை விமானத்தில் பயணம் செய்தவர்கள் பாதுகாப்பாக திரும்பி வர பிராதிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

TNN 23 Jul 2016, 4:14 pm
சென்னை: மாயமான விமானப்படை விமானத்தில் பயணம் செய்தவர்கள் பாதுகாப்பாக திரும்பி வர பிராதிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vikayakanth prayed for missing aircraft
மாயமான விமானம்: விஜயகாந்த் பிரார்த்தனை


சென்னை தாம்பரத்தில் இருந்து விமான படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் அந்தமானுக்கு நேற்று புறப்பட்டு சென்றது. இந்த, விமானம் நேற்று காலை 11.30 மணிக்கு போர்ட் பிளேர் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் கிளம்பிய சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இந்த விமானம் இழந்தது.

அதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாயமான விமானப்படை விமானத்தில் பயணம் செய்தவர்கள் பாதுகாப்பாக திரும்பி வர பிராதிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்ற இராணுவ விமானம் நேற்று தீடீரென மாயமானது. இந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு விபத்து ஜூன் மாதம் 8-ம் தேதி டோர்னியர் ரக விமானம் பயிற்சிக்காக புதுச்சேரி வரை சென்று விட்டு, சென்னை திரும்பும் போது மாயமானது. இதில் 3 பேர் பயணித்த விமானியும், துணை விமானியும் இறந்துள்ளனர்.

எனவே மீண்டும் அதேபோல் ஒரு செய்தி வந்து இருப்பது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கியுள்ளாக்கி இருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மாயமான 29பேர் குடும்பங்களுக்கு தனது ஆறுதல்களை தெரிவித்ததுடன், விரைவில் அவர்கள் நலமுடன் திரும்பி வர பிரார்த்தித்துக் கொள்வதாகவும் தனது அறிக்கைகியில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி