ஆப்நகரம்

இறந்தவர்களை மரியாதையோடு அனுப்பி வையுங்கள் - சென்னை மாநகராட்சி

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த கீழ்ப்பாக்கம் பகுதி சம்பவம் மாநில அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Apr 2020, 2:53 pm
சென்னையில் 55 வயதான நரம்பியல் மருத்துவர் கொரோனாவால் நேற்று உயிரிழந்த்தார். அவரது உடலை அடக்கம் செய்தால் தொற்று பரவும் என பயந்து போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய கீழ்ப்பாக்கம் பகுதி மக்களின் சம்பவத்திற்கு மாநகராட்சி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil சென்னை மாநகராட்சி


அந்த அறிவிப்பில், கொரோனாவால் சிலர் இவ்வுலகை விட்டு விடைபெற்றுச் செல்வதென்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உலகத்தில் இறந்து செல்பவர்களை மரியாதையுடன் அனுப்பி வையுங்கள். கொரோனாவால் இறந்தவர்களின் உடலை குறித்து அவகப்பட தேவையில்லை. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி கொரோனவால் இறந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்படுகிறது.

இறந்தவர் உடலில் 24 மணி நேரத்துக்கு மேல் வைரஸ் இருக்காது. கொரோனவால் சிலரை நாம் இழப்பது மிகவும் கடினமான ஒன்று. சக மனிதர்களாகிய நாம் அவர்களை தகுந்த முறையில் வழி அனுப்பி வைப்பது அனைவரது கடமையாகும் என இறந்தவர்களின் உடலை குறித்து பயப்படும் மக்களுக்கு மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

தமிழக மக்கள் இதை செய்தால்போதும்: அன்புமணி ராமதாஸ்!!

இந்த சம்பத்திற்க்கு பிறகு செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வெளியிட்டுள்ள வீடியோக்கள் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவைக்கிறது. கொரோனாவை குறித்து எண்ணற்ற புரிதல்களை தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக விளக்கியும், மக்களின் பய உணர்வு வன்முறையை தூண்டுவதோடு, உயிரை பணயம் வைத்து போராடும் மருத்துவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி