ஆப்நகரம்

சாப்பாடு வேனை கண்டதும் ஓடி வரும் நாய்கள்..! ஏக்கத்துடன் காத்திருக்கும் ஜீவன்கள்...

நெல்லை மாநகரில் சுற்றி திரியும் நாட்டு நாய்களுக்கு தன்னார்வலர்கள் தினமும் சாப்பாடு,பிஸ்கெட்,பிரட் போன்ற உணவு வகைகளை படைத்து வருகின்றனர்.

Samayam Tamil 25 Apr 2020, 4:34 pm
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு இன்றோடு 31 தினங்கள் ஆகிறது. கடைகள்,உணவகங்கள் திறந்து பொதுமக்கள் நடமாட்டம் இருந்தால் தெரு நாய்களுக்கு ஏதாவது ஒரு உணவு கிடைக்கும்.
Samayam Tamil தெரு நாய்களை காப்போம்


ஆனால் தற்போது ஊரடங்கால் பொதுமக்களின் நடமாட்டமே இல்லாத காரணத்தினால் நாய்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த 'தெரு நாய்களை காப்போம்' என்ற அமைப்பின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் சுமார் 20 பேர் பாளையங்கோட்டை சந்திப்பு, வண்ணார்பேட்டை டவுண் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் சுற்றி திரியும் சுமார் 250 தெரு நாய்களுக்கு ஒரு வேளை உணவு அளித்து வருகின்றனர்.

உணவு கொண்டு வரும் வாகனங்களை பார்த்தவுடன் நன்றி உள்ள அந்த ஜீவன்கள் ஓடி வரும் காட்சி அந்த பகுதியில் செல்வோரை பிரமிக்க வைக்கிறது. தினமும் ஒரு கலவை சாதமும், ஞாயிறு அன்று மட்டும் முட்டையுடன் கறி சோறும் வழங்கப்படுகிறது.

ஒய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு - தமிழக அரசு

இதே போல் தினமும் பிரட், பிஸ்கெட் பாக்கெட்டும் வழங்கபடுகிறது. பாளையங்கோட்டை சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள தாய்பால் குடிக்கும் குட்டி நாய்களுக்கு தினமும் 2 லிட்டர் பாலும் வழங்கபடுகிறது. இவர்களது சேவையை ஏராளமான பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி