ஆப்நகரம்

இயந்திரம் பழுது: புது விதமாக வாக்கு எண்ணிக்கை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதானதால் அச்சிடப்பட்ட சின்னங்களை எண்ணி முடிவை அறிவிக்கப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TNN 23 Dec 2017, 2:46 pm
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதானதால் அச்சிடப்பட்ட சின்னங்களை எண்ணி முடிவை அறிவிக்கப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil vote count in new methodology as evm controller goes down
இயந்திரம் பழுது: புது விதமாக வாக்கு எண்ணிக்கை!

இது பற்றி பேட்டி அளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அசம்பாவிதம் இல்லாமல் அமைதியாக நடந்தது. 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின." என்று கூறினார்.

மேலும், வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணும் போது பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பழுது நீக்கும் இயந்திரத்தை வைத்து அதைச் சரிசெய்வது வழக்கம். ஆனால், அதற்குப் பதிலாக வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல துண்டுச்சீட்டில் அச்சிட்டு சேமிக்கப்பட்ட காகிதங்களில் உள்ள சின்னங்களின் எண்ணிக்கையை வைத்து தேர்தல் முடிவை அறிவிக்க உள்ளோம்." என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி