ஆப்நகரம்

தமிழக அரசை விமர்சிக்க கமலுக்கு உரிமை உண்டு: சப்போர்ட் பண்ணும் மு.க.ஸ்டாலின்...!

தமிழக அரசை விமர்சிக்க கமலுக்கு உரிமை உண்டு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TNN 16 Jul 2017, 9:17 pm
சென்னை: தமிழக அரசை விமர்சிக்க கமலுக்கு உரிமை உண்டு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil voter kamal haasan has the right to criticise tn govt stalin says
தமிழக அரசை விமர்சிக்க கமலுக்கு உரிமை உண்டு: சப்போர்ட் பண்ணும் மு.க.ஸ்டாலின்...!


கடந்த புதன்கிழமை அன்று, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல் ஹாசன், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குறிப்பிட்டார். அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல் ஹாசன் தமிழக மக்களின் உணர்வுகளைத் தான் வெளியிட்டுள்ளதாக கூறினார். கமல் ஹாசன் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் பினாமி மற்றும் குதிரை பேர அரசை விமர்சிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், நடிகர் கமல் ஹாசன் தண்டிக்கப்பட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் ஒழுங்காக வரி செலுத்துகிறாரா? என்று சோதித்து பார்க்கட்டுமா என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.

Voter Kamal Haasan has the right to criticise TN govt, Stalin says.

அடுத்த செய்தி