ஆப்நகரம்

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஏற்படுத்தி தரப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

Samayam Tamil 5 Feb 2019, 11:35 am
யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஏற்படுத்தி தரப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
Samayam Tamil election commision


சென்னை உயர்நீதிமன்றத்தில் பாக்யராஜ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை பொதுமக்கள் அறியும் வகையில் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் விவிபேட் – VVPAT என்ற சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்தடுத்து வந்த தேர்தலில் இம்முறை கொண்டுவரப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணிய பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் VVPAT மூலம் ஒப்புகை சீட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை குறிப்பேடுத்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர்.

அடுத்த செய்தி