ஆப்நகரம்

ரஜினி மக்கள் மன்ற செயலாளருக்கு அருவாள் வெட்டு?

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி முன்னாள் அதிமுக MLA தூண்டில்பேரில்ரஜினி மக்கள் மன்றம் ஒன்றியச் செயலாளர் உட்பட 10 பேருக்கு அருவாள் வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது.

Samayam Tamil 16 Jan 2019, 5:10 pm
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி முன்னாள் அதிமுக MLA தூண்டில்பேரில்ரஜினி மக்கள் மன்றம் ஒன்றியச் செயலாளர் உட்பட 10 பேருக்கு அருவாள் வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது.
Samayam Tamil rajini makkal mandram


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் நந்தவனபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் ரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டின்அருகேயே பழனி தொகுதி முன்னாள்அதிமுக MLA சுப்பு ரத்தினம் வசித்துவருகிறார். இவர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து வரும் கண்ணனை பலமுறை மன்ற பொறுப்பில் இருந்து விலகிவிட்டு, அதிமுகவில் சேர்த்துவிடு என பலமுறை அழைத்தும் இவர் ரஜினி மக்கள் மன்ற பணிகளை செய்து வந்துள்ளார்.

இதனால் சுப்பு ரத்தினத்திற்கும் கண்ணனுக்கும் பகை ஏற்பட்டுள்ளது. பலமுறை கொலை மிரட்டல்களும் விடுத்துள்ளனர். இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்த தாடிகொம்பு போலீஸாரிடம் அப்பகுதிமக்கள்அனுமதி கேட்டுள்ளனர். காவல்நிலையத்தில் ஏற்கனவே அங்கு தகராறு இருப்பதால் விழா நடத்திட போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.

நந்தவனபட்டியில் பொங்கல்விழா நடைபெறாமல் இருப்பதற்கு கண்ணன்தான் காரணம் என்றுகூறி பழனிதொகுதி அதிமுக முன்னாள் MLA சுப்புரத்தினம் கோவையில் காவல்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரியும் தூயமணியிடம் புகார் அளித்தார்.

தற்போது, வெள்ளைசாமி மற்றும் பத்திர பதிவு துறையில் பணிபுரியும் ராமமூர்த்தி ஆகிய 3 பேரின் தூண்டல்பேரில் சிவா உள்ளிட்ட 10 பேர்கொண்ட கும்பல் கண்ணனையும் ஸுதர், பிளார், அஜீத்குமார், மனோஜ்குமார், தினேஸ்பாபு, பிரவீன், மஞ்சுலா, சந்திரா, முருகேஷ்வரி ஆகிய 10 பேரையும் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் அனைவரையும் வெட்டியதாக கூறப்படுகிறது.

’எங்களை வெட்டியதற்கு முழுகாரணமும் எனது அரசியல் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாத பழனி தொகுதி அதிமுக முன்னாள் MLA சுப்புரத்தினமும் அவரது இரு தம்பிகளுமேதான்’ என்று கூறினார் கண்ணன். இந்த சம்பவம் குறித்து தாடிகொம்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி