ஆப்நகரம்

காவிாியில் 13 ஆண்டுகளுக்கு பின்னா் 2.45 லட்சம் கனஅடி நீா் – வெதா்மேன் எச்சரிக்கை

கா்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிாியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2.45 லட்சம் கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழ்நாடு வெதா்மேன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 16 Aug 2018, 3:59 pm
கா்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிாியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2.45 லட்சம் கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழ்நாடு வெதா்மேன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Cauvery Flood


கா்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கா்நாடகாவின் கிருஷ்ண ராஜசாகா் அணையில் இருந்து 1 லட்சத்து 23 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 52 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூா் அணைக்கு 1.70 லட்சம் கனஅடி நீா் வந்து கொண்டு இருக்கிறது. அணை முழு கொள்ளளவை எட்டிவிட்ட காரணத்தால் அணைக்கு வரும் 1.70 லட்சம் கனஅடி நீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது.

மேலும் அமராவதி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீரும், பவானிசாகா் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது. மேட்டூரில் இருந்து 1.70 லட்சம் கனஅடியும், அமராவதியில் இருந்து 35 ஆயிரம் கனஅடியும், பவானிசாகா் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிாியில் தற்போது 2.45 லட்சம் கனஅடி நீா் வந்து கொண்டு இருக்கிறது.

கடந்த 2005ம் ஆண்டிற்கு பிறகு தற்போது 2.45 லட்சம் கனஅடி நீா் வந்து கொண்டு இருக்கிறது. எனவே கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி