ஆப்நகரம்

பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்வு- சென்னை மக்கள் மகிழ்ச்சி!

சென்னையின் முக்கிய நீர்ப்பிடிப்புகளில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் 10% அதிகரித்துள்ளதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்

Samayam Tamil 16 Jan 2018, 1:23 am
சென்னை: சென்னையின் முக்கிய நீர்ப்பிடிப்புகளில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் 10% அதிகரித்துள்ளதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Samayam Tamil water level in chennais poondi reservoir goes up 10 in 11 days
பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்வு- சென்னை மக்கள் மகிழ்ச்சி!


கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் அதிகரித்தது. இதனால் சென்னை மக்களின் நீர்த்தேவை சென்ற ஆண்டின் இறுதியில் பெருமளவு பூர்த்தியானது.

இதையடுத்து, ஜனவரி 2 ஆம் தேதிஆந்திர அரசு கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா நதி நீரை திறந்து விட்டுள்ளதால், பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1,012 மில்லியன் குயூபிக் அடி இருந்த நீரின் அளவு 1,108 மில்லியன் குயூபிக் அடியாக உயர்ந்துள்ளது.

மேலும், ஆந்திர அரசு 3.33 ஆயிரம் மில்லியன் குயூபிக் அடி நீரை திறந்துவிட ஒப்புதல் அளித்துள்ளதால் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி