ஆப்நகரம்

அடேங்கப்பா... இந்தளவு உயர்ந்த மேட்டூர் அணை; அதுவும் ஒரே நாளில் இப்படியொரு ஆச்சரியம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒரே நாளில் 15 அடி நீர்மட்டம் உயர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Aug 2019, 8:53 am
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் காவிரியில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்து சேருகிறது.
Samayam Tamil Mettur Dam


அங்கிருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வருகிறது. தற்போது ஒகேனக்கலில் 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Also Read: பெருக்கெடுத்த வெள்ளம்; நீர்வரத்து கிடுகிடு உயர்வு- ஒகேனக்கலில் மிரட்டும் காவிரி!

இதையொட்டி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.65 லட்சம் கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 44.61 டி.எம்.சி ஆகும். மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 82.62 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் 15 அடி நீர்மட்டம் அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இவ்வளவு மழைப்பொழிவா?- அவலாஞ்சியை பார்த்து அதிர்ச்சியில் வாயை பிளந்த ஆய்வாளர்கள்!

குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வேகமாக மேட்டூர் அணை நிரம்பி வருவதால், நாளைக்குள் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பொளந்து கட்டும் கன மழை; ரத்து செய்யப்பட்ட ரயில்கள், விமானங்கள் - முழு பட்டியல் இதோ!

இந்த அணையின் நீர்மட்டம் மொத்தம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகப்படியான நீர் வருகையால், விவசாயம் செழிக்க வழி ஏற்படும் என்று கருதுகின்றனர்.

அடுத்த செய்தி