ஆப்நகரம்

சிலைக் கடத்தலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர்கள் விளக்கம்!

நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தரப்பில், சிலை கடத்தல் வழக்கில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று மட்டுமே கூறப்பட்டது. யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில், இரு அமைச்சர்கள் தாமாகவே முன்வந்து சிலைக் கடத்தலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை மீண்டும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Jul 2019, 7:20 pm
சிலைக் கடத்தலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
Samayam Tamil சிலைக் கடத்தலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர்கள் விளக்கம்!
சிலைக் கடத்தலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர்கள் விளக்கம்!


பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி. காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொன். மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக, அதுதொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து உரிய ஆதாரங்களுடன் பதில் மனு தாக்கல் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்; , சிலைக் கடத்தலில் தாங்கள் ஈடுபட்டதாக வெளியான தகவல் பொய்யானது. பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலலையில், தங்களுக்கு எதிராக பொய் பரப்புரை செய்கின்றனர். இந்த செய்தியால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக இருவரும் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தரப்பில், சிலை கடத்தல் வழக்கில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று மட்டுமே கூறப்பட்டது. யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில், இரு அமைச்சர்கள் தாமாகவே முன்வந்து இவ்வாறு பேசியது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி