ஆப்நகரம்

எதிரிக்கட்சியாக அல்லாமல்; எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டசபையில், ''திமுக எதிரிக் கட்சியாக செயல்படாமல், எதிர்க் கட்சியாக செயல்படும்'' என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

TOI Contributor 3 Jun 2016, 12:22 pm
சென்னை: தமிழக சட்டசபையில், ''திமுக எதிரிக் கட்சியாக செயல்படாமல், எதிர்க் கட்சியாக செயல்படும்'' என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Samayam Tamil we will act as opposite party not enemy party in the assembly m k stalin
எதிரிக்கட்சியாக அல்லாமல்; எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: ஸ்டாலின்

தமிழகத்தின் 15வது சட்டசபை சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் தேர்வு செய்யப்பட்டனர். அவரை வாழ்த்தி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், சபாநாயகருக்கு தி.மு.க., சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். சபாநாயகர் தனபாலை அவரது இருக்கையில் அமர வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. நூற்றாண்டு காண உள்ள சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது மகிழ்ச்சி. தி.மு.க., எதிர்க்கட்சியாக செயல்படும். எதிரிக்கட்சியாக செயல்படாது.

கட்சி சார்பின்றி சட்டசபையில் சபாநாயகர் செயல்பட வேண்டும். பலம் பொருந்திய எதிர்க்கட்சியான தி.மு.க., தனது கடமையை ஆற்றும். இந்தியாவிலேயே தமிழக சட்டசபைதான் சிறப்பு வாய்ந்தது. மாநிலத்தின் நலன் காக்க ஆளுங்கட்சியுடன் இணைந்து பணியாற்றுவோம்'' என்றார்.

அடுத்த செய்தி