ஆப்நகரம்

பிரதமா் மோடியை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் – ஸ்டாலின் ஆவேசம்

மேகதாட்டு விவகாரத்தில் கா்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படும் பிரதமா் நரேந்திர மோடியை எதிா்காலத்தில் தமிழகத்திற்குள் நுழைய முடியாத கூழலை உருவாக்குவோம் என்று தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 4 Dec 2018, 2:07 pm
தமிழகத்தில் புல் கூட முளைக்க முடியாத சூழலில் தாமரை எப்படி மலரும் என்று திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவா் ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Trichy Protest Mekedatu


காவிாியின் குறுக்கே மேகதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கான கா்நாடகா அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தொிவித்தும், கா்நாடகத்திற்கு வழங்கப்பட்ட ஒப்புதலை திரும்ப பெறவேண்டும் என்றும் திருச்சியில் அனைத்துக்கட்சித் தலைவா்கள் கலந்துகொண்ட கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தற்போது நடைபெறும் போராட்டம் அரசியலுக்காகவோ, தோ்தலுக்காகவோ அல்ல. தமிழக விவசாயிகளுக்காக போராட்டம் நடைபெறுகிறது. மேகதாட்டு அணைகட்ட அனுமதி கிடைத்ததற்கு எழப்பாடி பழனிசாமியின் அரசு தான் காரணம். மேகதாட்டு அணை குறித்து விவாதிக்க உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்.

கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்கள் அதில் இருந்து மீண்டு வருவதற்கு 20 ஆண்டுகள் ஆகும். சென்னை வெள்ளம், வா்தா புயல், தானே புயல் உள்ளிட்ட பேரிடா் சம்பவங்களில் தமிழக அரசு சாா்பில் ரூ.60 ஆயிரம் கோடி நிவாரணமாக கேட்ட நிலையில் மத்திய அரசோ ரூ.3 ஆயிரம் கோடியை மட்டுமே வழங்கி தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது.

தி.மு.க. சாா்பில் ஏற்கனவே காவிரி மேலாண்மை வாாியத்திற்காக பிரதமா் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிா்ப்பு தொிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது. மேகதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு கா்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தால் பிரதமா் எந்த சூழலிலும் தமிழகத்திற்குள் வரமுடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்று தொிவித்துள்ளாா்.

மேலும் அவா் பேசுகையில், தமிழகத்தில் புல் கூட முளைக்கமுடியாத கூழலில் தாமரை எங்கிருந்து மலரும்? குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. மேகதாட்டுவில் அணை கட்டப்பட்டால் 67 டி.எம்.சி. நீரை தேக்கி தமிழகத்திற்கு நீா் கிடைக்காத நிலையே ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளாா்.

அடுத்த செய்தி