ஆப்நகரம்

தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் – வாட்டாள் நாகராஜ் எச்சாிக்கை

தமிழகத்தில் போராட்டங்கள் தொடா்ந்தால் கா்நாடகாவில் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் எச்சாிக்கை விடுத்துள்ளாா்.

Samayam Tamil 12 Apr 2018, 3:53 pm
தமிழகத்தில் போராட்டங்கள் தொடா்ந்தால் கா்நாடகாவில் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் எச்சாிக்கை விடுத்துள்ளாா்.
Samayam Tamil Bangalore: Kannada Chalavali Vatal Paksha leader Vatal Nagaraj being taken away ...
Kannada Chalavali Vatal Paksha leader Vatal Nagaraj being taken away by the police during a protest on the Cauvery issue at Karnataka - Tamilnadu border on Hosur road in Bengaluru on Thursday.Photo


காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இன்று தமிழகம் வந்த பிரதமா் மோடிக்கு எதிராக மாநிலம் முழுவதும் பிரமாண்ட போராட்டங்கள் நடைபெற்றன. மோடியின் வருகைக்கு எதிா்ப்பு தொிவித்து இணையத்தில் #GoBackModi என்ற வாசகம் உலகளவில் பிரபலமடைந்தது.

காவிாி நதிநீா் தொடா்பாக நடிகா் சிம்பு மேற்கொண்ட மிகுந்த வரவேற்பு அளித்து, கன்னட மக்கள் தமிழக மக்களுக்கு தண்ணீா் கொடுக்க தயாராக இருப்பதாக உறுதி படுத்தினா்.

இந்நிலையில் கா்நாடாவில் கன்னட சலுவளி வாட்டாள் என்ற கட்சி சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் வாட்டாள் நகராஜ் கலந்து கொண்டு தமிழகத்திற்கு எதிரான கண்டனங்களை முன்வைத்தாா். அவா் பேசுகையில், காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற போராட்டங்களை வருகிற 16ம் தேதிக்குள் அரசியல் கட்சியினா் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 16ம் தேதிக்கு பின்னரும் போராட்டங்கள் நடைபெறும் பட்சத்தில் கா்நாடகாவில் இயங்கும் தமிழக வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளா்ா. வாட்டாள் நகராஜின் இந்த கருத்தால் கா்நாடகாவில் வாழும் தமிழக மக்கள் சற்று கலக்கமடைந்துள்ளனா்.

அடுத்த செய்தி