ஆப்நகரம்

இன்னும் ஐந்து நாள்களுக்கு தமிழகம் எப்படி இருக்கும் தெரியுமா?

தமிழ்நாடு புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Feb 2021, 1:51 pm
பிப்ரவரி 7 முதல் 11ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tn weather


அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு மழை எங்கும் பதிவாகவில்லை.
தமிழக பள்ளிகள் திறப்பு: வெளியானது முக்கிய அறிவிப்பு!
பிப்ரவரி 7 முதல் 9 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஜனவரி மாதத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறினர். மற்றொரு பெருமழை வரும் பிப்ரவரி மாதத்தில் பெய்யவுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்திருந்தனர். தமிழ்நாடு வெதர்மேன் அதிக மழைப் பொழிவு இருக்கும், புதிய உச்சம் தொட வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஒதுங்கிப் போகும் சசிகலா, மனம் மாறிய எடப்பாடி: திரைமறைவு காட்சிகள்!

இந்நிலையில் தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவுவதால் மழை எப்போது பெய்யும் என மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அடுத்த செய்தி