ஆப்நகரம்

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க கடும் எதிர்ப்பு..! உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பதை எதிர்த்து பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 May 2020, 6:50 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டிருப்பதையடுத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் மே 7 ஆம் தேதி மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு திமுக, தமிழக பாஜக, பாமக கட்சிகள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க கடும் எதிர்ப்பு


குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால், சரீர இடைவெளி என்பது கேள்விக்குறியாகிவிடும் என பலதரப்பிலிருந்து எழுந்துள்ள குற்றசாட்டுகள். இதையடுத்து சென்னை மாநகர, பெருநகர காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளைத்தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என மற்றொரு அறிவிப்பை அரசு வெளியிட்டது.

ஆறு மாவட்டங்களில் மழை: பிற இடங்களில் வெளுத்து வாங்கும் வெயில்!

இந்நிலையில், ராம்குமார் ஆதித்தன் என்பவர் தமிழகத்தில் மதுக்கடைகளை தற்போது திறக்கூடாதென சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடுத்துள்ளார். கொரோனா இல்லாத நிலையை எட்டிய பிறகே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் எனவும், மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரவுள்ளது.

அடுத்த செய்தி