ஆப்நகரம்

ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி அனுப்பிய மெசேஜ்: அடுத்து நடக்கப் போகும் முக்கிய மாற்றம்?

ஓ.பன்னீர் செல்வம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Mar 2022, 8:50 am
அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது தான் அரசியல் அரங்கில் தற்போது அதிகம் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. தேனி மாவட்ட நிர்வாகிகளை சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி கொடுக்க வைத்து மீண்டும் ஒரு கலகத்துக்கான கல் எறிந்தார் என்கிறார்கள் ஓபிஎஸ். ஆனால் அது கிணற்றில் போட்ட கல்லாக கிடந்துவிட்டது.
Samayam Tamil eps ops


எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார் என்ன முடிவில் இருக்கிறார் என விசாரித்தோம். அப்போது ஓபிஎஸ் குறித்து வருத்தப்பட்டு பேசியது பற்றி சொல்கிறார்கள் அதிமுக முக்கிய நிர்வாகிகள்.

“கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்வதில் யார் அதிகம் வேலை பார்த்தார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். தமிழ்நாடு முழுக்க கட்சி நிர்வாகிகள் தேர்தல் வேலைகளை சிறப்பாக பார்த்தனர். தென் மாவட்டங்களில் அவர் வேலை பார்த்திருந்தால் இன்று நாம் தான் ஆட்சியில் இருந்திருப்போம். நான் முதல்வராக மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் தேர்தல் வேலை பார்க்கவில்லை. அது தென் மாவட்ட நிர்வாகிகளுக்கும் தெரியும். அதனால் தான் இப்போதும் அவர் பின்னால் எந்த மாவட்ட செயலாளரோ, அமைச்சரோ செல்லவில்லை. ஆனாலும் அவர் சீனியர். அவருக்கான மரியாதையை நான் கொடுத்தே வருகிறேன்.
ஒண்ணு இல்ல ரெண்டு பாதுகாப்பு கவசம் இருக்குது: உதயகுமார் எந்த பக்கம்?
மீண்டும் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வந்த போது நான் தான் அவரை ஒருங்கிணைப்பாளர் பதவியில் நிற்க சொன்னேன். எனக்கு தான் ஆதரவு அதிகமாக இருந்தது. நான் நினைத்திருந்தால் ஒருங்கிணைப்பாளர் பதவியில் அமர்ந்திருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஏன் அண்ணன் மீண்டும் கலகத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என தெரியவில்லை. அவர்கள் கட்சிக்குள் வந்தால் மீண்டும் அந்த குடும்பத்தின் ஆதிக்கம் தான் தலையெடுக்கும். அது ஓபிஎஸ் அண்ணனுக்கு தெரியாதா என்ன? கட்சிக்குள் வந்துவிட்டால் இவரை அவர்கள் சும்மா விடுவார்களா?” என்று சொல்லி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் எடப்பாடி பழனிசாமி வருத்தத்துடன் பேசியுள்ளாராம்.
உத்தர பிரதேசத்தில் யார் ஆட்சி? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்!
இந்த தகவல் ஓ.பன்னீர் செல்வத்தின் காதுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அவர் எதிர்பார்த்தபடி ஓபிஎஸ்ஸிடம் இந்த தகவல் சென்று சேர்ந்துள்ளது.

சசிகலா ஆதரவு அலையை இதற்கு மேலும் வலுகட்டாயமாக உருவாக்க முடியாது, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர் வரக்கூடும் என்கிறார்கள் தேனி வட்டாரத்தினர்.

அடுத்த செய்தி