ஆப்நகரம்

சசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சர்டிஃபிகேட்!

நன்னடத்தை விதிகள் சசிகலாவுக்கு பொருந்தாது என கர்நாடக அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் சிறையில் அவர் செய்த பணிகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Samayam Tamil 25 Nov 2020, 10:11 am
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனைக் காலம் ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாவார் என கர்நாடக சிறைத்துறை இதற்கு முன் தெரிவித்திருந்தது. பத்து கோடியே பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அவரது பெயரில் அபராதத் தொகை செலுத்தப்பட்டது.
Samayam Tamil what is sasikala doing in jail important information released
சசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சர்டிஃபிகேட்!


பொறுமையை கடைபிடிக்கும் சசிகலா

அபராதத் தொகை செலுத்தப்பட்டுவிட்டதால் நன்னடத்தை விதிகளை சுட்டிக் காட்டி நான்கு ஆண்டு கால சிறைவாழ்க்கையில் விடுமுறை நாள்களை கணக்கிட்டு பரோலில் வந்த நாள்களை கழித்தாலும் எந்நேரமும் வெளியே வருவார் எனக் கூறப்பட்டது. ஆனால் நன்னடத்தை விதிகள் அவருக்கு பொருந்தாது என கர்நாடக பாஜக அமைச்சர் கூறியிருந்தார். இது தொடர்பாக சசிகலா தரப்பு மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அது தோல்வியில் முடிந்ததாலுமே ஜனவரியில் விடுதலையானால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

சிறையில் என்ன செய்கிறார்?

சசிகலா சிறையில் இருந்த போது சுடிதார் அணிந்து ஷாப்பிங் சென்றதாக புகார் எழுந்தது. சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. அவருக்கு சிறப்பு சலுகை காட்டப்பட்டதா என்ற புகார்களும் விமர்சனங்களும் அப்போது எழுந்தன. ஆனால் சசிகலா சிறையில் என்னென்ன வேலைகள் செய்கிறார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

தப்பிய ஸ்டாலின், சிக்கிய மம்தா: பி.கே டீமால் கட்சி உடையுமா?

கன்னடத்தில் கதைக்கும் சசிகலா

சிறை தண்டனை விதிக்கப்பட்ட சமயத்தில் சசிகலாவை தமிழ்நாட்டு சிறைக்கு கொண்டுவர அவர் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. கன்னடம் தெரியாததால் அவருக்கு ஆரம்பத்தில் அங்கு மொழி பிரச்னை ஏற்பட்டது. சிறை அதிகாரிகள், ஊழியர்களுடன் பேச முடியாமல் அவதிப்பட்டுள்ளார். தற்போது, கன்னடம் பேச, எழுத கற்றுக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.

நானும் விவசாயி தான்!

சசிகலா ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வந்த எடப்பாடி பழனிசாமி தான் தான் விவசாயிகளின் காவலன் என போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் போது சசிகலா சிறையில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறாராம். .நான்கு ஆண்டுகளில் சசிகலா அரை ஏக்கர் நிலத்தில், விவசாயம் செய்து, 1 டன் பப்பாளி விளைவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீன்ஸ், கத்தரிக்காய், முருங்கைக்காய் உட்பட, பல காய்கறிகள் விளைவித்துள்ளார். சிறிய ரோஜா தோட்டமும் அமைத்துள்ளார்.

சிறைக்குள் கற்ற தொழில்!

அதிமுக கூட்டணி: உருவானது அடுத்த சலசலப்பு!

சேலைகளுக்கு டிசைன் செய்வது, வளையல், செயின்களுக்கு டிசைன் செய்வது போன்ற, கை வேலைகளை செய்வதாகவும் கர்நாடகாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைத் துறை அறிவித்துள்ள படி சசிகலாவின் விடுதலைக்கு இன்னும் சரியாக இரு மாதங்களே உள்ள நிலையில் அதற்குள் அவர் வெளிவர வாய்ப்பில்லை என்கின்றனர். ஆனால் அவரது வருகையை பெரியளவில் கொண்டாட அமமுகவினர் தயாராகி வருகின்றனர். சசிகலாவோடு சிறையில் உள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோரது அபராதத் தொகை கட்டும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

அடுத்த செய்தி