ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுக்கும் ஷாக்: முடிவை மாற்றுவாரா?

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Samayam Tamil 15 Dec 2021, 10:51 am
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைத் தான் பத்து லட்சம் அரசு ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
Samayam Tamil tn govt employees


அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்த நிலையில் ஓய்வுபெறும் போது அவர்களுக்கான பண பலன்களை கொடுக்க முடியாமல் ஓய்வுபெறும் வயதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு 59ஆக உயர்த்தியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 60ஆக அதிகரித்து அதிமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான அரசாணையை திமுக அரசு வெளியிட்டது.

ஜனவரி 5ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் திமுக வீழ்த்திய விக்கெட்: இந்த தடவை கொங்கு யாருக்கு?

ஓய்வு பெறும் வயதை நீட்டித்துக் கொண்டே சென்றால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்தது. அதேசமயம் ஓய்வு நேரப் பணப் பலன்கள் கொடுப்பதற்கும் அரசிடம் போதிய நிதி இல்லை என்கிறார்கள்.

எனவே 33ஆண்டுகாலம் பணிபுரிந்தவர்கள் 58 வயதில் ஓய்வு பெறுவார்கள் என்றும், மற்றவர்கள் 60 வயது வரை பணிபுரிவார்கள் என்றும் தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 58 வயதில் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வு நேரப் பணப் பலனை பாண்ட் பத்திரமாக கொடுக்கலாம் என்ற திட்டமும் அரசிடம் இருப்பதாக சொல்கிறார்கள்.

ரஜினிக்கு தூது விட்ட எடப்பாடி: அந்த மாதிரி முடிவெடுத்துடாதீங்க!

அரசு ஊழியர்கள் சிலரிடம் இது குறித்து பேசினோம். “ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணத்தைக் கொண்டு குழந்தைகளின் திருமணம், தொழில், தங்களது எதிர்காலத் தேவைகள் என பல திட்டங்களை அரசு ஊழியர்கள் வைத்திருப்பர். ஆனால் அந்த தொகையை பாண்ட் பத்திரமாக வழங்கினால் நீண்ட நாள் கனவு, எதிர்பார்ப்பு எல்லாம் ஒரே நொடியில் நொறுங்கிவிடும்” என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

டிசம்பர் 18,19 ஆகிய இரு நாள்கள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14ஆவது மாநில மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற உள்ளது. 19ஆம் தேதி நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது, சட்டமன்ற கூட்டத் தொடரில் என்ன அறிவிப்பு வெளியாகும் என்பதை முதல்வரின் உரை மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் அரசு ஊழியர்கள்.

அடுத்த செய்தி