ஆப்நகரம்

சூடான ஸ்டாலின்: செந்தில் பாலாஜிக்கு புது அசைண்ட்மெண்ட் - ஒரே மாதத்தில் மாறும் காட்சிகள்!

தமிழக அரசியலில் அதிரடி சம்பவங்கள் வரும் வாரங்களில் நடைபெறும் என்று அதிமுக, திமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 15 Mar 2023, 1:04 pm
அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திமுகவிலிருந்து குறி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Samayam Tamil what is the new assignment given by cm mk stalin to senthil balaji check for disgruntled aiadmk mlas
சூடான ஸ்டாலின்: செந்தில் பாலாஜிக்கு புது அசைண்ட்மெண்ட் - ஒரே மாதத்தில் மாறும் காட்சிகள்!


எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியான நிலையில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் ஆதரவோடு உடனடியாக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி வெற்றி பெற்று உச்ச பதவியில் அசைக்க முடியாத அளவு அமர்ந்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறார். ஆனால் அவருக்கே அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவம் ஒன்று நடைபெற உள்ளதாம்.

கண்கள் சிவந்த ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பாஜக, அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுகவின் நிகழ்காலம், எதிர்காலம் நாம் தான் என்று தனது ஆதரவாளர்களிடம் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக மிகக் கடுமையாக பேசினார். தரமற்ற முறையில் எடப்பாடி விமர்சனம் செய்வதாக புகார்கள் எழுந்தன. எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும் சொல்லப்பட்டுள்ளது.

எடப்பாடியின் பெருமையை காலி பண்ண பிளான்!

வைரஸ் காய்ச்சல் பரவல்: பள்ளிகளுக்கு 11 நாள்கள் விடுமுறை! மாணவர்கள் கொண்டாட்டம்!

எடப்பாடி பழனிசாமி துணிச்சலுடன் பேசுவதற்கு முக்கிய காரணம் என்ன? சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் தங்களது கூட்டணிக்கு 75 இடங்களை பெற்றுத் தந்தார். அதிமுகவுக்கு மட்டும் 65 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியமைத்த போது 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதிமுக கூட்டணி அப்போது 69 இடங்களிலும் குறிப்பாக அதிமுக 61 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. ஜெயலலிதா எதிர்கட்சித் தலைவராக இருந்த போது பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைவிட அதிகமாக பெற்றிருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி பெருமைப்பட்டு வரும் நிலையில் அதில் கை வைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

செந்தில் பாலாஜிக்கு முக்கிய உத்தரவு!

மாற்றுக் கட்சியினர் ஆளுங்கட்சி நோக்கி வருவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு தான். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சிலர் அதில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த நிகழ்வு நடைபெறும். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி அடிக்கடி பிரம்மாண்டமாக மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைத்து வருகிறார். அவருக்கு மேலிடத்திலிருந்து ஒரு உத்தரவு வந்துள்ளதாக சொல்கிறார்கள்.

முதல்வரை சந்திக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்?

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை: அரசு எடுக்கும் முடிவு!

பிற கட்சி தொண்டர்களை இணைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதே சமயம் பெரிய புள்ளிகளை வளைத்து வாருங்கள். குறிப்பாக சட்டமன்றத்தில் நமது பேச்சுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருந்து சிலராவது மேஜையை தட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். இதைத் தொடர்ந்து எதிர்கட்சியில் அதிருப்தியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் லிஸ்ட்டை எடுத்து வருகிறார்களாம். எனவே விரைவில் தொகுதிப் பிரச்சினைக்காக அதிமுக கரைவேட்டி எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்திக்கலாம் என்கிறார்கள்.

எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி