ஆப்நகரம்

சட்டமன்ற அதிமுக தலைவராக செங்கோட்டையா? எடப்பாடியா? தீபக்கா? சசிகலா ஆலோசனை

சசிகலாவின் அடுத்த நகர்வாக தனக்கு பதிலாக தனக்கு நம்பிக்கையாக இருக்கும் ஒருவரை சட்டமன்ற அதிமுக தலைவராக தேர்வு செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் விஜய பாஸ்கரும் உறுதிபடுத்தியுள்ளார்.

TOI Contributor 14 Feb 2017, 12:33 pm
சசிகலாவின் அடுத்த நகர்வாக தனக்கு பதிலாக தனக்கு நம்பிக்கையாக இருக்கும் ஒருவரை சட்டமன்ற அதிமுக தலைவராக தேர்வு செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் விஜய பாஸ்கரும் உறுதிபடுத்தியுள்ளார்.
Samayam Tamil what is the next movement of sasikala who will be next assembly leader of aiadmk
சட்டமன்ற அதிமுக தலைவராக செங்கோட்டையா? எடப்பாடியா? தீபக்கா? சசிகலா ஆலோசனை


முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் அசாதரண சூழல் நிலவி தற்போது க்ளைமேக்ஸ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதிமுக கட்சிக்கு போதுச்செயலாலராக பொறுப்பேற்ற சசிகலா முதல்வராவதற்கு வசதியாக சட்டமன்றத்திற்கான அதிமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த ராஜினாமாவுக்குப் பின்னர் பன்னீர் செல்வம் எடுத்த அதிரடி முடிவுகளால் அதிமுக சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என்று இரண்டாகப் பிளவு கண்டது.

எம்.எல்.ஏ.,களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வகையில் 129 எம்.எல்.ஏ.,க்களை கோல்டன் பே ரெசார்ட்டில் சசிகலா வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் அவர்களை சந்தித்து வந்த சசிகலா நேற்றும் அங்கு சென்று அவர்களுடன் தங்கினார்.

இன்று காலை அவருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில் சசிகலா முதல்வராக முடியாத நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை அல்லது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரில் ஒருவரை சட்டமன்றத்திற்கான அதிமுக தலைவராக தேர்வு செய்யப்படும் பணியில் சசிகலா ஈடுபட்டு வருகிறார்.

தற்போது 125 எம்.எல்.ஏ.,க்களுடன் சசிகலா பேச்சுவார்த்தை நடத்தி வருக்கிறார் என்று அமைச்சர் விஜய பாஸ்கரும் உறுதிபடுத்தியுள்ளார். சசிகலா குடும்பத்தில் அனைவரின் மீதும் ஊழல் வழக்கு இருப்பதால், அவர்கள் யாரும் முதல்வர் பொறுப்புக்கு வர முடியாது. அவருக்குப் பதிலாக தனக்கு விசுவாசமாக இருக்கும் ஒருவரைத்தான் சசிகலா தேர்வு செய்வார். அந்த வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை இந்தப் பொறுப்புக்கு கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

What is the next movement of Sasikala? who will be next assembly leader of AIADMK?

அடுத்த செய்தி