ஆப்நகரம்

காஞ்சி முதல் திருவெண்காடு வரை... கோயில் கோயிலாக சுற்றும் துர்கா ஸ்டாலின்... என்ன காரணம்?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும், அவர் காட்டிய வழியில் ஆட்சியை நடத்தி வருவதாக சொல்லும் மு.க.ஸ்டாலினும் தனிப்பட்ட முறையில் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வந்தாலும், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர தெய்வ பக்தி கொண்டவராக திகழ்கிறார். 'அவங்க கொள்கையில் அவங்க இருக்காங்க; என் பக்தியில் நான் இருக்கேன்' என்று கூலாக சொல்கிறார் துர்கா ஸ்டாலின்.

கடந்த ஓராண்டாக மாதந்தோறும் பல்வேறு கோயில்களுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருவது, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டுமின்றி, ஸ்டாலினின் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காகவும், உதயநிதி ஸ்டாலின் அரசியலில் பெரிய இடத்துக்கு வர வேண்டும் என்பதற்காகவும் தான் என்கின்றனர் விவரமறிந்த உடன்பிறப்புகள்.

Samayam Tamil 20 May 2022, 7:09 pm
கடந்த ஓராண்டாக மாதந்தோறும் துர்கா ஸ்டாலின் பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவது, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டுமின்றி, ஸ்டாலினின் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காகவும், உதயநிதி ஸ்டாலின் அரசியலில் பெரிய இடத்துக்கு வர வேண்டும் என்பதற்காகவும் தான் என்கின்றனர் விவரமறிந்த உடன்பிறப்புகள்.
Samayam Tamil what is the reason behind durga stalin temple visit frequently in the past one year
காஞ்சி முதல் திருவெண்காடு வரை... கோயில் கோயிலாக சுற்றும் துர்கா ஸ்டாலின்... என்ன காரணம்?


​காஞ்சி காமாட்சி அம்மன் தரிசனம்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது ஆன்மிக சுற்றுப் பயணத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார் துர்கா ஸ்டாலின். அங்கு உலக புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் அம்பாளை தரிசித்த அவர், ஆஷாட நவராத்திரி பூஜையிலும் பங்கேற்றார்.

​திருப்பதி, திருவண்ணாமலை பயணம்

திருப்பதி ஏழுமலையான் மீது தனி பக்தி கொண்ட துர்கா ஸ்டாலின், திருமலைக்கு பலமுறை பாத யாத்திரை சென்றுள்ளார். இந்த நிலையில் : காஞ்சி காமாட்சி அம்மன் வழிபாட்டை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவர் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தார். அதே மாதம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலைக்கும் சென்று சிவப்பெருமானை வழிப்பட்டார்.

​திருச்செந்தூர் சண்முக தரிசனம்

திருப்பதி, திருவண்ணாமலையை அடுத்து, கடந்த செப்டம்பரில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு அவர் சென்றார். அங்கு கடலில் கால் நனைத்து வழிபட்ட பின்னர், சன்னதிக்குள் சென்று சண்முகனையும் தரிசித்தார்.

​சமயபுரம், ஸ்ரீ ரங்கம்

மாதந்தோறும் கோயில் தரிசனம் என்ற முறையில், கடந்த அக்டோபர் மாதம் திருச்சிக்கு சென்ற துர்கா ஸ்டாலின், டோல்கேட்டில் இருந்து 2 கி.மீ. நடந்து சென்று சமயபுரம் மாரியம்மனை கண்டு தரிசித்த அவர், அப்படியே வெக்காளிம்மனையும், ஸ்ரீ ரங்கம் அரங்கநாதரையும் வழிபட்டு வந்தார்.

குருவாயூர் துலாபாரம்

நமது அண்டை மாநிலமான கேரளாவில் சபரிமலைக்கு அடுத்து பிரசித்தி பெற்றது குருவாயூர் கிருஷ்ணன் கோயில். டிசம்பர் மாதம் அங்கு சென்ற துர்கா ஸ்டாலின் துலாபாரத்தில் அமர்ந்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

தேர் இழுத்த துர்கா ஸ்டாலின்

துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு. அங்குள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் மார்ச் மாதம் நடைபெற்ற மாசி இந்திர திருவிழாவில் கலந்து கொண்டு அன்னதானம் செய்தார். அத்துடன் அங்கு நடைபெற்ற தேர் திருவிழாவில் ஊர் மக்களுடன் சேர்ந்து தேரை வடம் பிடித்தும் அவர் இழுத்தார்.

அடுத்த செய்தி