ஆப்நகரம்

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கு: என்னென்ன தளர்வுகள்?

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 25 Jun 2021, 7:23 am
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்தக்கட்ட ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil tn lockdown relaxation


தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி காலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்களுடன் இன்று (ஜூன் 25) காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை கணக்கில் கொண்டு மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி பிரிவு 1இல் இடம்பெற்றிருந்த 11 மாவட்டங்களுக்கு கடந்த மாதம் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. பிரிவு 2இல் இடம்பெற்றிருந்த 23 மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் அறுவிக்கப்பட்டன. முக்கியமாக அத்தியாவசிய பணிகளுக்கான கடைகள் மாலை 7 மணி வரை திறந்துவைக்க அனுமதியளிக்கப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள் என்னென்ன?
ஹார்டுவேர், மின்னனு பொருள்கள் விற்பனை கடைகள், புத்தகக டைகள், காலணி விற்பனை கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், கண் கண்ணாடி கடைகள் உள்ளிட்ட பல கடைகள் மாலை 5 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டது.

பிரிவு 3ல் இடம்பெற்ற மாவட்டங்களில் மேற்சொன்ன கடைகள் 7 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இங்கு பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டது.

இந்த முறை என்னென்ன தளர்வுகள்?

இந்நிலையில் ஜூன் 28ஆம் தேதி காலை முதல் அமலுக்கு வர உள்ள புதிய தளர்வுகள் குறித்து விசாரித்த போது முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தற்போது பின்பற்றப்படும் தளர்வுகள் 23 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் என கூறுகிறார்கள். இதனால் அந்த மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்து போக்குவரத்து இயக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் கடைகள் திறந்திருக்கும் நேரமும் அதிகரிக்கப்படும். பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் இம்முறை சிறிய அளவிலான நகைக் கடைகள், துணிக்கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிறிய அளவிலான வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.
பள்ளிகளைத் திறக்க அரசுக்கு பரிந்துரை: எப்போது அறிவிப்பு வெளியாகும்?
11 மாவட்டங்களுக்கு இம்முறை பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்படும். ஆனால் பொது போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படாது என்கிறார்கள்.

அடுத்த செய்தி