ஆப்நகரம்

கண்ணப்பன் மீதான கடைசி கோபம்: ஸ்டாலினுக்கு போன தகவல்!

ராஜ கண்ணப்பனை இலாக்கா மாற்றியதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

Samayam Tamil 2 Apr 2022, 12:03 pm
அதிமுக, திமுக என எந்த கட்சி என்றாலும் தனக்கான ஆதரவாளர்கள், செல்வாக்கு, பண பலம் ஆகியவற்றிற்கு குறைவில்லாமல் இருப்பவர்கள் வெகுசில புள்ளிகளே. அதில் முக்கியமானவர் ராஜகண்ணப்பன் என்கிறார்கள் முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலை உற்றுநோக்கிவருபவர்கள்.
Samayam Tamil mk stalin raja kannappan


2019 மக்களவைத் தேர்தல் சமயத்தில் அதிமுகவில் சீட் மறுக்கப்பட பிரச்சார காலகட்டத்திலேயே ரூட்டை மாற்றி அறிவாலயம் சென்றவர் ராஜகண்ணப்பன். வந்த கையோடு 2021 தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு பசையுள்ள துறையான போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்றார்.

முதன்முறையாக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அரசின் மீது பெரிய புகார் ஏதும் எழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இதையே அமைச்ச்ர்கள் அனைவரிடமும் கூறிவந்தார். அதிகாரிகள் மூலம் கண்காணிப்பும் நடைபெறுகிறது என்கிறார்கள்.
மே 4 தான் கடைசி நாள்: பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!
அதற்கேற்ப பெரிய விமர்சனங்கள் ஏதும் இல்லாமல் ஒரு ஆண்டை நிறைவு செய்ய உள்ளார். ஆனால் ராஜ கண்ணப்பனை சுற்றி சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்தவண்ணம் இருந்தன. தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வாங்க ஆவினை புறக்கணித்து வேறொரு நிறுவனத்துக்கு சில பல காரணங்களுக்காக டெண்டர் கொடுக்க முயன்றது, கூட்டணிக் கட்சித் தலைவர் திருமாவளவனை பிளாஸ்டிக் சேரில் உட்காரவைத்து அழகு பார்த்தது, தனக்கு நெருக்கமான போக்குவரத்து துறை ஆணையர் லஞ்ச வழக்கில் சிக்கியது என அடுத்தடுத்து சர்ச்சைகள் அவரைச் சுற்றி வட்டமடித்தன. இவையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டே இருந்தன.

இதன் தொடர்ச்சியாக முதுகளத்தூர் பிடிஓ ராஜேந்திரன் சாதிப் பெயரை சொல்லி அமைச்சர் தன்னை திட்டியதாக பேட்டியளிக்க ராஜ கண்ணப்பன் வசம் இருந்த போக்குவரத்துத் துறை எஸ்.எஸ்.சிவசங்கரிடமும், அவர் வகித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் லூலூ ஹைபர் மார்கெட்: யாருக்கு என்ன லாபம்?
திமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விஷயத்தில் ராஜ கண்ணப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறது. வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். இது முதல்வர் ஸ்டாலினுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம். ஆனால் இந்த விஷயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டதும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஸ்டாலினுக்கு டெல்லியில் கிடைத்த கௌரவம்: புலம்பித் தள்ளும் எடப்பாடி
கண்ணப்பன் இலாக்கா மாற்றப்பட்டதற்கு இது மட்டும் காரணம் இல்லை என்று கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். மாநில போக்குவரத்து துறைக்கு நாள் ஒன்றுக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. இதை ஒன்றிய அரசிடமிருந்தே விலைக்கு வாங்கி வந்தனர். லிட்டர் 113 ரூபாய்க்கு மொத்தமாக வாங்கப்பட்டு வந்த நிலையில் அதை நிறுத்திவிட்டு தனியாரிடம் சில்லறை விலைக்கு வாங்கலாம் என கணக்கு போட்டுள்ளார் ராஜ கண்ணப்பன். நல்ல யோசனை இதன் மூலம் 3.5 கோடி ரூபாய் மிச்சமாகும் என அதிகாரிகளும் சொல்ல முதல்வர் அலுவலகத்தில் இருந்தும் க்ரீன் சிக்னல் வந்துள்ளது. ஆனால் அதன் பிறகுதான் இன்னொரு தகவல் முதல்வர் கவனத்துக்கு சென்றதாம். சில்லறை விலைக்கு வாங்கும் போது குறிப்பிட்ட கமிஷன் அமைச்சருக்கு செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாம். இந்த தகவல் தான் முதல்வரை உடனடியாக இலாக்கா மாற்ற வைத்தது என்கிறார்கள்.

அடுத்த செய்தி