ஆப்நகரம்

பிடிஆருக்கு எடப்பாடி கொடுத்த சர்டிஃபிகேட்: அமைச்சரவையில் இருந்து தூக்காததற்கு என்ன காரணம்?

அமைச்சரவை மாற்றம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 11 May 2023, 1:55 pm
ஓபிஎஸ் -டிடிவி தினகரன் சந்திப்பு, அமைச்சரவை மாற்றம் என பல்வேறு விஷயங்கள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இவை குறித்து கூறினார்.
Samayam Tamil eps ptr


டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ள நிலையில் அது குறித்து பேசிய அவர், “மாயமானும் மண் குதிரையும் கூட்டு சேர்ந்துள்ளது. பூஜ்ஜியம் + பூஜ்ஜியம் = பூஜ்ஜியம். தூரோகியும், துரோகியும் இணைந்துள்ளார்கள்.தினகரனின் கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிறது.” என்றார்.

பன்ருட்டி ராமச்சந்திரன் குறித்து பேசிய அவர், “நேற்று பன்ருட்டியார் பேட்டி கொடுத்தார். அவர் எம்ஜிஆருக்கு விசுவாசமாக இல்லை. அம்மாவுக்கு விசுவாசமாக இல்லை, பின்னர் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்றார், அங்கும் விசுவாசமாக இல்லை, தேமுதிகவுக்கு சென்றார் அங்கும் அவர் விசுவாசமாக இல்லை. அவர் எப்போதும் யாருக்கும் விசுவாசமாக இல்லை” என்றார்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: வெளியாவது எப்போது? எவ்வாறு பார்ப்பது?
ஓபிஎஸ் குறித்து பேசிய அவர், “ஓபிஎஸ் விளையாட்டை பார்க்க வேண்டும் என்றால் பார்த்துவிட்டு வந்திருக்கலாம். ஆனால் ஸ்டாலின் மருமகன் சபரீசனை அங்கு சந்தித்து பேசியுள்ளார். நாங்கள் ஏற்கெனவே பன்னீர் செல்வம் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என்று கூறினோம். இப்போது அவரே நிரூபித்துவிட்டார்”
ஓபிஆர் எங்க கட்சி இல்லைங்க: மீண்டும் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்த அதிமுக
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஒரு ஆடியோவால் அரசாங்கமே ஆடிப்போய்விட்டது. பிடிஆர் நிதியமைச்சராக இருந்தவர், அவர் மெத்த படித்தவர். பொருளாதார நிபுணர். அவரே உதயநிதியும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக கூறியுள்ளார். அதனால் தான் அவரது துறையை மாற்றியுள்ளனர். அவர் மேலும் எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல் வைத்துள்ளனர்” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி