ஆப்நகரம்

அதிமுக அவசர செயற்குழு அறிவிப்பு: என்னென்ன விவாதிக்கப்படும்?

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 6 Apr 2023, 11:48 am
அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil aiadmk office


அந்த அறிவிப்பில், “கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்தும்; கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16.4.2023 - ஞாயிற்றுக் கிழமை பகல் 1.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் பதவி யாருக்கு? ஸ்டாலின் எடுக்கும் முடிவு!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அதில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தது.

அதன்பின்னரே எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
தட்ட வேண்டிய இடத்தில் தட்டிய எடப்பாடி: நாடாளுமன்றத்தில் நிலக்கரி சுரங்கம் விவகாரம்!
ஓபிஎஸ் தரப்பை நீதிமன்றத்தில் எதிர்கொள்வது தொடர்பாகவும், அவரது அணியில் உள்ளவர்களை எவ்வாறு தங்கள் பக்கம் இழுப்பது என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்கிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி