ஆப்நகரம்

தெற்கை பிடிக்க எடப்பாடி போடும் திட்டம்: தொண்டர்கள் யார் பக்கம்?

மதுரை, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

Samayam Tamil 29 Sep 2022, 11:09 am
எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக மதுரை, சிவகாசி, விருதுநகர் பகுதிகளுக்கு சென்று இன்று பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
Samayam Tamil eps in madurai


இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த ராஜ் சத்யன் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் வருகையை முன்னிட்டு மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்து மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தமிழக அரசு தடை!
அதிமுகவிலிருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கப்பட்ட பின்னர் தென் மண்டலத்தில் அக்கட்சி பலவீனமடைந்ததாக கூறப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தென் மண்டலத்தில் பல தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்ததற்கு தினகரனின் அமமுக பிரித்த வாக்குகளே காரணம் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம் மற்றும் அவர்களது ஆதரவாளர்களையும் நீக்கியிருப்பதால் தென் மண்டலத்தில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்ஸின் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது, பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து சில உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். எனவே இவர்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பிரம்மாண்ட கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக மதுரையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக, காங்கிரஸை அழைக்கும் திருமாவளவன்: நீங்க வராட்டா எப்படி?
இருப்பினும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் கூறுகிறார்கள். எனவே அதை மாற்றிக்காட்டி தொண்டர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகவே பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தெற்கை நோக்கி பயணம் கிளம்பியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: டிஜிபிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!
இதற்கு தொண்டர்கள் மத்தியில் என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி