ஆப்நகரம்

சன்டேவும் அதுவுமா அவதிப்பட்ட வாட்ஸ் அப் பயனாளிகள்!!

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, வாட்ஸ் அப் சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் அதன் பயனாளிகள் பாதிக்கப்பட்டனர்.

Samayam Tamil 19 Jan 2020, 9:38 pm
உலக அளவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் முதல் விருப்பமாக வாட்ஸ் அப் உள்ளது. இந்த செயலியின் மூலம் தகவல் பரிமாற்றங்கள் மட்டுமின்றி, புகைப்படங்கள், வீடியோக்களையும் பயனாளிகள் பதிவேற்றம் செய்து, தங்களுடைய குரூப்பில் அல்லது தங்களுக்க வேண்டிய தனிநபர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.
Samayam Tamil wa


இல்லங்களில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட விழாக்கள், கோயில் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள், சுற்றுலா தல காட்சிகள் என பல்வேறு விதமான புகைப்படங்கள், வீடியோக்களை பயனாளிகள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்க போலீஸ் ஸ்டேஷன் போகனுமாம்: எங்க தெரியுமா?

அதுவும் வார இறுதி நாட்களில் திருமணம் போன்ற விழாக்கள் அதிக அளவில் நடைபெறுவதாலும், கோயில், கடற்கரை, திரையரங்கம் என பொதுமக்கள் அதிக அளவில் வெளியே செல்வதாலும், வார நாட்களைவிட சனி, ஞாயிறுக்கிழமைகளில் வாட்ஸ் அப்பின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று, மாலை திடீரென வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் லட்சக்கணக்கான பயனாளிகள் தவிப்புக்கு ஆளாகினர். உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் இந்தப் பிரச்சனை இருந்தது.

வாட்ஸ் அப்பில் திடீரென ஏற்பட்ட இந்த சிக்கலுக்கான காரணம் குறித்து அதன் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. எனினும், ஹேக்கர்களின் சதி காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

வாட்ஸ்அப் வழியாக Happy New Year 2020 ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி (ஆண்ட்ராய்டு & ஐஓஎஸ்)?

சுமார் மூன்று மணிநேர பாதிப்புக்கு பிறகு, இரவு 7:30 மணி அளவில் வாட்ஸ் அப் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வாட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து, whatsappdown என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

அடுத்த செய்தி