ஆப்நகரம்

மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு அனுமதி: எப்போது தெரியுமா?

நவம்பர் 1ஆம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 13 Oct 2020, 11:57 am
நவம்பர் 1ஆம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil marina beach


சென்னை கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, கடற்கரையை சுத்தப்படுத்துவது மற்றும் அழகுபடுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆஜரானார். சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்.

முதல்வரின் தாயார் இறுதி சடங்கு: திரண்டு வந்த கூட்டம்!

மெரினாவில் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிறதே, என நீதிபதிகள் கேள்விஎழுப்பிய நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டதாக பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாழ்வாதாரம் இழந்த வியாபாரிகளின் துயர் துடைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? புள்ளி விவரங்கள் தெரிவிப்பது இதுதான்!

எப்போது பொது மக்கள் மெரினா கடற்கரைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் அக்டோபர் 31 வரை உள்ளது என்றும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எனினும் அது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கும் என்றும் தெர்வித்தார்.

வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினமும் மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆஜராகவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி