ஆப்நகரம்

சசிகலா இன்னும் 15 நாட்களில் சிறையிலிருந்து வெளியே வந்து விடுவார்!

சசிகலா இன்னும் 15 நாட்களில் சிறையிலிருந்து வெளியே வந்து விடுவார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 23 Sep 2020, 8:04 pm
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். எப்படியும் எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அவர் வந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
Samayam Tamil சசிகலா
சசிகலா


2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பதிலளித்துள்ள நிலையில், அபராதத் தொகையை செலுத்துவதற்காக சசிகலா தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது.. ஆனாலும், அதற்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளிலும் டிடிவி தினகரன் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சசிகலா இன்னும் 15 நாட்களில் சிறையிலிருந்து வெளியே வந்து விடுவார் என்று அமமுக பொருளாளர் வெற்றிவேல் தகவல் தெரிவித்துள்ளார். கர்நாடக சிறை விதிகளின்படி, செப்டம்பர் இறுதியில் சசிகலா வெளியே வந்தாக வேண்டும். இதில் வேறு யாரும் உதவி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

AIADMK: அதிமுகவை கைப்பற்ற வியூகம்; பிளான் போடும் சசிகலா அண்ட் கோ!

டிடிவி தினகரன் டெல்லி பயணம் தொடர்பாக பேசிய வெற்றிவேல், அவர் டெல்லிக்கு சென்றது உண்மை. அது குறித்து செய்தியாளார் சந்திப்பின் போது அவரே விளக்கமளிப்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும், டிடிவி தினகரன், பெங்களூரு சென்றது தொடர்பாக தனக்கு தகவல் எதுவும் இல்லை. கொரோனாவுக்கு பின்னர் சிறைகள் திறக்கவில்லை. தற்போது என்ன நிலவரம் என்பது தெரியவில்லை என்றும் வெற்றிவேள் தெரிவித்துள்ளார்.

அதிமுக - அமமுக இணைப்பு தொடர்பாக பாஜக மேலிடம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அமமுக - அதிமுக இணைப்பு தொடர்பான வேலையை பாஜக செய்யுமா எனத் தெரியவில்லை. அவர்கள் அதில் தலையிடவும் முடியாது என்றும் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.


இன்றைக்கு இருக்கும் சூழலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலு தோற்கும். அதன்பிறகு அவர்கள் கட்சியை கீழே போட்டுவிட்டு சென்று விடுவார்கள். எனவே, மீட்டெடுப்பு என்பது நடப்பது உறுதி. அது எப்போது என்பது பின்னர்தான் தெரியவரும் என்றும் வெற்றிவேல் விளக்கமளித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற தினகரனின் நிலைப்பாடு அப்படியே இருக்கும். அது குறித்து எதிர்காலத்தில் டிடிவி தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுகவை ஆரம்பித்தோம். எதிர்காலத்திலும் அதேதான் எங்களது குறிக்கோள். எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களிடம் வாக்கு கேட்கும் முகம் தற்போதைய அதிமுக இரட்டை தலைமையிடம் இல்லை. அதற்கான வலுவான தலைவர்கள் மற்றும் முகங்கள் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் என எங்களிடம்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்த்து கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. எங்களிடம் வருவதற்கு அவர்களுக்கும் எவ்வித தயக்கமும் இருக்காது என்றும் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

அணிகள் இணைப்புக்கு பின்னர் முதல்வர் வேட்பாளர் யாராக இருப்பார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த வெற்றிவேல், அதுகுறித்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

அடுத்த செய்தி