ஆப்நகரம்

தமிழக கல்லூரிகள் திறப்பு எப்போது? இனிமேல் இப்படித் தான்!

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

Samayam Tamil 13 May 2021, 1:30 pm
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. மே 1ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
Samayam Tamil TN College Repoen


ஜூன் மாதம் அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்துவது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு: விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு எப்போது வகுப்புகள் தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பரவலின் முதல் அலையின் போது தமிழகம் முழுக்க பல்வேறு கல்லூரிகள் கொரோனா தடுப்பு மையங்களாக பயன்படுத்தப்பட்டன.

இரண்டாவது அலையில் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்தபடி உள்ளது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் ஆம்புலன்ஸ்களில் காத்திருந்தே பலர் உயிரிழந்து வருகின்றனர்.

திடீரென வீட்டை மாற்றும் ஸ்டாலின்? இதுக்கு பின்னால இப்படி ஒரு மேட்டரா?

இதனால் மேலும் பல கல்லூரிகளை கொரோனா தடுப்பு மையங்களாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கல்லூரிகள் திறப்பு என்பது இன்னும் இரு மாதங்களுக்கு உறுதியாக இருக்காது என்கிறார்கள்.

அதிகாரிகளுக்கு ஸ்டாலின் ரகசிய உத்தரவு: யாருக்கு போட்ட ஸ்கெட்ச்?
அதேசமயம் ஜூன் மாத மத்தியில் இருந்து மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாப் பல்கலைக் கழக பருவத் தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் என அமைச்சர் பொன்முடி கூறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி