ஆப்நகரம்

இ பதிவு சிக்கல் எப்போது சரியாகும்? அமைச்சர் சொன்ன விளக்கம்!

இ பதிவு இணையதளம் முடங்கியுள்ள நிலையில் அது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியுள்ளார்.

Samayam Tamil 7 Jun 2021, 1:49 pm
தமிழ்நாடு அரசின் இ பதிவு இணையதளத்தை 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அணுகியதால் முடங்கியுள்ளது. இன்று மாலைக்குள் இ பதிவு இணையதளம் சரி செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn e registration


சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கொரோனா காலத்தில் தொற்று பரவலை தடுக்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இ பதிவு செய்வது செம ஈஸி: இதை மட்டும் செஞ்சா போதும்!
வழக்கமாக தமிழ்நாடு அரசின் இ பதிவு இணையதளத்தை 6 லட்சம் பேர் வரை வந்து செல்லக்கூடிய வகையில் செயல்பட்டு வருவதாகவும் இந்த நிலையில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் தமிழக அரசின் இ பதிவு இணைய தளத்தை அணுகியதால் இணையதளம் முடங்கி இருப்பதாகவும் அதனை சரி செய்யக்கூடிய பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இன்று மாலைக்குள் இணையதளம் சரி செய்யப்படும் என தெரிவித்தார்

தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை என்று இ பதிவு இணையதளத்தை பயன்படுத்தி வெளியே வர முயற்சிக்க கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.

இ பதிவு இணையதளத்தில் போலியான ஆவணங்கள் மூலம் அனுமதி பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்

மேலும் அவர், ஒடிடி இணையதள தொடர்களில் தமிழர்களுக்கு எதிரான தொடர்களை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்: தமிழ்நாடு அரசு மாஸ்டர் ஸ்ட்ரோக்!
கடந்த ஆட்சியில் ஊழல் புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட கிராமங்களுக்கு இணையதளம் கொண்டு செல்லக்கூடிய திட்டமான பாரத் நெட் திட்டம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றை விரைவில் தமிழக அரசின் சார்பில் வாதாடி வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி கிடைக்க கூடிய வகையில் தமிழ்நாடு அரசு செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த செய்தி