ஆப்நகரம்

குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூ: படையெடுக்கும் பெண்கள், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!

குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூ வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அது குறித்து வதந்தி ஒன்று பரவி வருகிறது.

Samayam Tamil 3 Jul 2021, 2:20 pm
தேர்தல் சமயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மக்களை கவரும் வகையிலான பல அறிவிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன.
Samayam Tamil tn household cash


திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய், பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு போன்ற அறிவிப்புகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

அதேசமயம் உடனடியாக நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் இன்னும் அமலுக்கு வரவில்லை. அதில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத் தொகையாக 1000 ரூ மாதம் தோறும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு. இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது குறித்த வதந்தி ஒன்று பரவி வருகிறது.
டிஜிட்டல் மீட்டரும் இல்ல, இனி ஸ்மார்ட் மீட்டர்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
அதாவது குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத் தொகை என்பது குடும்ப அட்டைகளில் புகைப்படம் இடம்பெற்றால் மட்டுமே வழங்கப்படும் என்ற வதந்தி மக்களிடையே பரவியுள்ளது. இதனால் குடும்ப அட்டைகளில் புகைப்படத்தை மாற்றுவதற்காக பல பெண்கள் உணவு வழங்கல் துறை அலுவகத்திக்கும் ஆன்லைன் பதிவு மேற்கொள்ளும் இ-சேவை அலுவலகத்திற்கும் படையெடுத்து வருகின்றனர்.

வருகின்ற பெண்களிடம் அதிகாரிகள் அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று அறிவித்தாலும் கூட்டம் குறைந்தபாடில்லையாம். இது போன்று மக்கள் கூட்டமாக வருவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உருவாகும்.

ஸ்டாலினுக்கு வேறு வழி இல்லை: சர்ப்ரைஸ் கொடுத்தே ஆகணும்!

தமிழ்நாடு அரசு இன்னும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எப்படியும் உள்ளாட்சித் தேர்தலுக்குள் அரசு இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த செய்தி