ஆப்நகரம்

ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு மேட்ச்சாகும் வடிவேலு டயலாக்: அதிமுக தொண்டர்கள் ரியாக்‌ஷன் என்ன?

அதிமுகவில் இரு தரப்பும் மாறி மாறி எதிர் தரப்பை டேமேஜ் செய்து அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியளித்து வருகின்றனர்.

Samayam Tamil 7 Oct 2022, 9:12 am
‘உண்மையை சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொல்வாங்க, இந்த ரெண்டு தெய்வமும் மாறி மாறி உண்மையைச் சொல்லிகிட்டு இருக்கு’ என்று வடிவேலுவின் காமெடி வசனத்துக்கு பக்காவாக பொருந்திப் போகிறார்கள் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர்.
Samayam Tamil ops eps vadivelu


ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் இரு அணிகள் உருவாகியுள்ள நிலையில் இரு தரப்பும் மாறி மாறி எதிர் தரப்பை விமர்சித்து பேசுவது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக இது தான் நிலைமை என்றாலும் சமீப நாள்களில் இரு தரப்பும் வார்த்தைகளில் சற்று மூர்க்கமாக மோதிக்கொள்கிறார்கள். திரைக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.
வடகிழக்கு பருவமழை: தமிழக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்தார் என்று நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் தங்கமணி பேசி அதிர்ச்சியைக் கிளப்பினார். எடப்பாடியோடு இணைந்து செல்வதற்கு ஓபிஎஸ்ஸை தடுப்பது வைத்திலிங்கமும் அவரோடு இருக்கும் மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் போன்றவர்கள் தான் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

அந்த அதிர்ச்சி குறைவதற்குள் ஓபிஎஸ் முகாமிலிருந்து ஜேசிடி பிரபாகர் எதிர் தரப்பை நோக்கி ஒரு ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தார்.

“வழக்கில் சிக்கி விடாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேரம் பேசிய உண்மைகள், யார் திமுகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறார்கள், யார் திமுகவுக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்பது பற்றி விரிவான விளக்கங்கள் வரும் மாதங்களில் தெரியவரும். நவம்பர் 21-ம் தேதிக்கு முன்பாகவே அந்த தகவல்கள் வெளிக்கொண்டுவரப்படும். ஓபிஎஸ் அனுமதி அளித்தால் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன். அப்போது வெட்டவெளிச்சமாக இந்த நாட்டு மக்களுக்கு தெரியவரும்” என்று ஜேசிடி பிரபாகர் பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

இதற்கிடையே வரும் திங்கள் கிழமை மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்துகிறார். அந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று விவாதிக்க உள்ளனர்.

ஜேசிடி பிரபாகரும் ஓபிஎஸ் தரப்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளதாக கூறியுள்ளார். போட்டி பொதுக்குழுவைக் கூட்டும் முடிவும் உள்ளதும்.
இன்று 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இதற்கிடையே ஓபிஎஸ் உடன் 100 சதவீதம் இணைய வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இரு தரப்பும் மாறி மாறி வசைமாரி பொழியும் நிலையில் அதிமுக தொண்டர்கள் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்ப்போம் என்ற நிலைக்கு வந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி