ஆப்நகரம்

மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

மாயமான ஏ.என். 32 ரக விமானத்தில் பயணித்தவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TNN 26 Jul 2016, 9:28 pm
சென்னை: மாயமான ஏ.என். 32 ரக விமானத்தில் பயணித்தவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil who are all in missing aircraft name list announced
மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு


சென்னை தாம்பரத்தில் இருந்து விமான படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் அந்தமான் புறப்பட்டு சென்றது. போர்ட் பிளேர் சென்றடைந்திருக்க வேண்டிய விமானம், கிளம்பிய சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

அதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. மாயமாகிப் போன ஏ.என்.32 ரக விமானத்தை தேடும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விமானத்தில் 29 பேர் பயணம் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பட்சாரா (கேப்டன்), பி.கே.நந்தால் (துணை விமானி), குணார் பார்பேட்டி, ரஞ்சன் (பொறியாளர்), ஜி.சவுத்ரி, கபில், தீபிகா, பி.சந்த், முத்துகிருஷ்ணன், முகேஷ் தாகூர், சி.எஸ்.யாதவ், ஏக்நாத் தாக், ஜின்சா ஷியாம், விமல், பிரசாத் பாபு, பூர்ண சந்திரா, சந்திரன் மகாராணா, சின்ன ராவ், சீனிவாச ராவ், அகிலேஷ், பிபின் குமார், எல்.கே. திரிபாதி, ரகுவீர் வர்மா, நவ்ஜோத் சிங், ரவிதேவ் சிங், சம்பவ் மூர்த்தி, பூபிந்தர் சிங், நாகேந்திர ராவ், சஜீவ் குமார் ஆகிய 29 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி