ஆப்நகரம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள்: சுனில் பாலிவால்!

ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்கத் தகுதியில்லாதவர்கள் என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Mar 2018, 6:49 pm
ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்கத் தகுதியில்லாதவர்கள் என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil who dont know how to apply engineering application online are not fit to study engineering tamilnadu higher education sunil paliwal
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள்: சுனில் பாலிவால்!

சென்னை ஐஐடியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது’ அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் இன்டர்ன்ஷிப் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்தாண்டு முதல் பொறியல் படிப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், 25ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்தன. இதனால் மீண்டும் பழைய முறையை அமல்படுத்துமாறு கல்லூரிகளின் நிறுவனர்கள் கேட்கின்றனர். ஆன்லைனில்கூட விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியானவர்கள் அல்ல. மேலும் 45 முதல் 50 நாட்கள் வரை நடத்தப்படும் செமஸ்டர் தேர்வால், மாணவர்களின் நேரம் விரயம் ஆகிறது. இனி வரும் ஆண்டில் 28 நாட்களுக்குள் அண்ணா பல்கலைகழத்தின் தேர்வுகள் முடிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்

அடுத்த செய்தி