ஆப்நகரம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000ரூ: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூ உரிமைத் தொகை திட்டம் யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 18 Aug 2021, 7:32 pm
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்றிட நிதிநிலைமை சரியாக இல்லை.
Samayam Tamil tn family head cash


இந்நிலையில் எதிர்கட்சிகள் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என குரல் கொடுத்துவருகின்றன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

யார் யாருக்கெல்லாம் உரிமைத் தொகை கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கும், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம், குடிசை வீடுகளுக்கு இலவசமாகவும் மற்ற அனைத்து வீடுகளுக்கும், 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. இதற்காக ஏற்படும் செலவை தமிழ்நாடு அரசு மானியமாக வழங்குகிறது.

11 லட்சம் குடிசை மின் இணைப்புகள் உள்ளன. 73 லட்சம் குடும்பங்கள் 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. எனவே இந்த 84 லட்சம் குடும்பங்களில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அடுத்த செய்தி