ஆப்நகரம்

ஜெயலலிதாவுடன் மருத்துவமனை சென்ற அந்த மூவர் யார்?

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதாவை மருத்துமனைக்கு எடுத்து சென்றபோது, அவருடன் அப்போலோ மருத்துவர்கள் மூவர் சென்றுள்ளனர்.

TOI Contributor 28 Sep 2017, 2:26 pm
சென்னை: கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதாவை மருத்துமனைக்கு எடுத்து சென்றபோது, அவருடன் அப்போலோ மருத்துவர்கள் மூவர் சென்றுள்ளனர்.
Samayam Tamil who had gone with jayalalithaa on september 22nd 2016
ஜெயலலிதாவுடன் மருத்துவமனை சென்ற அந்த மூவர் யார்?


கடந்தாண்டு செப்டம்பர் 22ஆம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரவு 10 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு போயஸ் இல்லத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அந்த மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் சென்றுள்ளனர்.

அந்த மூவர் சுரேஷ், சினேகா, அனிஷ் ஆகிய மூன்று மருத்துவர்கள் என்பது தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்கள் மூவரும் ஜெயலலிதாவை பரிசோதித்த போது அவர் அரை மயக்க நிலையில் இருந்துள்ளார். மருத்துவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் நிலையில் அவர் இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் பரிசோதித்தபோது ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இல்லை. ஆனால், சர்க்கரை மட்டும் 508 எம்ஜி என்ற அளவில் இருந்துள்ளது. இது நார்மலாக இருக்க வேண்டிய அளவிற்கு மிகவும் அதிகமாகும்.

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மறுநாள் அவருக்கு காய்ச்சல், நீர்ச் சத்து குறைவு என்று கூறப்பட்டது. ஆனால், மருத்துவ அறிக்கையின்படி அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக இருந்துள்ளது. இதைத்தான் முதலில் ஜெயலலிதாவை சோதித்த மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Who had gone with Jayalalithaa on september 22nd 2016

அடுத்த செய்தி