ஆப்நகரம்

யார் இந்த எஸ்.காமராஜ் ? திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டி!

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள எஸ்.காமராஜ் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 4 Jan 2019, 3:39 pm
திருவாரூர் இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ்(52) போட்டியிடுவார் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்.
Samayam Tamil Kamaraj


இவர் திருவாரூர் மாவட்ட அமமுக செயலாளராக இருக்கிறார். முன்னதாக அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்தார். இவர் சசிகலா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.

எம்.காம்., பி.எட் படித்துள்ளார். மன்னார்குடி அருகே உள்ள எட அன்னவாசலில் பிறந்தவர். இவரது மனைவி விஜயலட்சுமி. தரணி கல்வி நிறுவனங்களில் தாளாளராக இருக்கிறார்.

கடந்த 1981ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருந்தார். நீடா மங்கலத்தில் 2 முறை அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு தலைவராக பதவி வகித்தவர். சிறப்பான செயல்பாடு காரணமாக திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் 10,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜாவிடம் தோல்வியுற்றார்.

2017ல் அதிமுக பிரிந்த போது, டிடிவி அணியில் சேர்ந்து கொண்டார். திருவாரூர் பகுதியில் மிகவும் பிரபலமான நபர் என்பதால், உள்ளூர் மக்கள் ஆதரவு அளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி