ஆப்நகரம்

இந்திய விமானப்படையின் புதிய தளபதி : யார் இந்த ஆர்.கே.எஸ் பதாரியா??

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.கே.எஸ் பதாரியா. யார் இந்த ஆர்.கே.எஸ் பதாரியா??

Samayam Tamil 19 Sep 2019, 6:31 pm
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.கே.எஸ் பதாரியா. யார் இந்த ஆர்.கே.எஸ் பதாரியா??
Samayam Tamil rks-bhadauria-as-next-chief-of-air-staff-1-1568895397


ராகேஷ் குமார் சிங் பதாரியா என்பது இவரது முழுப்பெயர். தற்போது இந்திய விமானப்படையின் துணைத்தளபதியாக பொறுப்பு வகிக்கிறார்.

தற்போதைய விமானப்படைத் தளபதி பி.எஸ். தானோவ் செப்.30ம் பதவி ஓய்வு பெறுவதையடுத்து, ஆர்.கே.எஸ்.பதாரியா செப்டம்பர் 30 ம் தேதி இந்திய துணைக்கண்டத்தின் விமானப்படைத் தளபதியாக பதவியேற்க உள்ளார்.

இவர், 1980ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் ஆண்டு போர் விமானப்பிரிவில் பணிநியமனம் செய்யப்பட்டார். சுமார் 26 விதமான போர் விமானங்களை கையாளத்தெரிந்த இவர், 4250 மணி நேரங்கள் போர் விமானங்களில் பயணித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரம் விஷிஸ்த் சேவா , அதித் விஷிஸ்த் சேவா மற்றும் வாயு சேனா ஆகிய பதக்கங்களை பெற்றுள்ள இவர், தனது 36 ஆண்டுகால அனுபவத்தில் சுமார் 15 பதக்கங்களை பெற்றுள்ளார்.

முப்படைகளில் ஒன்றின் முக்கியமான தலைமைத்தளபதியாக பதவியேற்கவிருக்கும் பதாரியாவுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறது சமயம் தமிழ்.

அடுத்த செய்தி