ஆப்நகரம்

பிரதமர் மோடி, சீன அதிபருடன் உலா வந்த அந்த அதிகாரி யார்?

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜிங்பிங் உடன் இருந்த அந்த நபர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்து இருக்கும். அவர் தான் மொழி பெயர்ப்பாளர் ரவீந்திரன் மது சுதன்.

Samayam Tamil 12 Oct 2019, 3:12 pm
பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பின்போது, அவர்களுடன் இரண்டு மொழி பெயர்ப்பாளர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ரவீந்திரன் மது சுதன்.
Samayam Tamil Modi in Chennai 2


சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர் ரவீந்திரன் மது சுதன். ஐ.எப்.எஸ் அதிகாரியாக இருக்கும் இவர் 2007ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்தவர். சீனாவில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் முதன்மை செயலாளராக இருக்கிறார்.

இந்தியாவில் பயிற்சி முடித்த இவருக்கு முதல் இரண்டு ஆண்டுகள் அதாவது 2009 முதல் ஜூலை 2011 வரை பெய்ஜிங்கில் இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

ஷி ஜின்பிங்கை வழியனுப்பி வைத்த தமிழ்நாடு!

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2011 முதல் ஜூன் 2013 வரை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு மாற்றப்பட்டார். மீண்டும் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து, முதல் நிலைச் செயலாளர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். மீண்டும் சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 2018ஆம் ஆண்டில் இருந்து துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.

வேட்டி, சட்டை, குப்பை அள்ளியது என்று தமிழ் மனங்களை கொள்ளை கொண்டாரா மோடி!!

கடந்த ஆண்டு சீனாவில் மோடி, ஜிங்பிங் சந்திப்பு நடந்தது. அப்போதும் ரவீந்திரன்தான் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். இதையடுத்து தற்போதும் மொழி பெயர்ப்பாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், இருதரப்புக்கும் மொழி பெயர்ப்பாளராக திகழ்ந்தார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் மட்டுமின்றி சீனாவின் மாண்டரின் மொழியிலும் தேர்ந்தவர் ரவீந்திரன்.

அடுத்த செய்தி