ஆப்நகரம்

அதிரடியாக விலை உயர்வு: முட்டை விலை எவ்வளவு தெரியுமா?

கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் சில்லறையாக விற்கப்படும் முட்டையின் விலையும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Dec 2020, 12:56 pm
கொரோனா ஊரடங்கால் உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது நமது கடமை. அதற்கேற்ப காய்கறிகள், முட்டை, பால், பழங்கள் உள்ளிட்டவற்றை நமது அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
Samayam Tamil Egg Price Today


இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்றுமதி குறைந்து விலையும் உயர்ந்தது. இருப்பினும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியாக முட்டை உண்ணலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதனால் முட்டை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த சூழலில் படிப்படியாக முட்டை உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் வரை குறைந்தது. இந்நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பூஜையுடன் துவங்கிய விஜேஎஸ், நயனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்

அதில் முட்டை விலையை உயர்த்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் அதிகரிக்கப்பட்டு, 4.15 ரூபாயாக ஒரு முட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் முட்டை விலை 4.20 காசாக விற்கப்படுகிறது. இந்த சூழலில் கொள்முதல் விலை உயர்வு காரணமாக சில்லறை விலையும் விரைவில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி